கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று ஒரு சில படங்கள் நடித்துவிட்டு திரும்பியவர்கள் அதிகம். இன்று – ஜூன் 21 – நடிகர் தனுஷ். பாலிவுட் எண்ட்ரி நடந்து இத்துடன் 7 ஆண்டுகள் ஆகிறது. ராஞ்சனா படம் தான் அவர் நடித்த முதல் இந்தி படம்.

ஆனந்த் எல் ராய் இயக்கினார். இதில் சோனம் கபூர் ஹீரோயினாக நடித்தார். அஹுஜா, ஸ்வாரா பாஸ்கர், முகமது ஜீஷன் மற்றும் அபய் தியோல் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இப்படம் ஒரு காதல் கதையாகும் .ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார்.
ராஞ்சனா படம் தமிழில் அம்பிகாபதி என வெளியிடப்பட்டது,
இப்படத்தையடுத்து இந்தியில் சமீதாப் படத்தில் நடித்த தனுஷ் தற்போது அட்ராங்கி ரே படத்தில் நடித்து வருகிறார்.
Patrikai.com official YouTube Channel