கடப்பா:

ந்திரா ஏரியில் பிணமாக மிதந்த ஏழு தமிழர்கள், அம்மாநில காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

ஆந்திரா மாநிலம் கடப்பா அருகேயுள்ள ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக மிதந்த ஏழு தமிழர்கள் நேற்று மதியம் வனத்துறையால் கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் ஆந்திர காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

இவர்கள், “ஏற்கெனவே செம்மரம் கடத்துவதாகச் சொல்லி தமிழர்களை கைது செய்வதும், என்கவுண்டர் செய்வ தும் ஆந்திர காவல்துறையினருக்கு வழக்கமாக இருக்கிறது.

திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய போனவர்களைக்கூட செம்மரம் கடத்தியதாக ஆந்திர காவல்துறை கைது செய்த சம்பவங்களும் உண்டு.

சில நாட்களுக்கு முன்புகூட, செம்மரம் கடத்தியதாக 12 தமிழர்களை கைது செய்த ஆந்திர காவல்துறை, நான்குபேர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டதாக கூறியது.

இந்த நிலையில் ஏரியில் ஏழு தமிழர்கள் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது அவர்கள் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டு ஏரியில் வீசப்பட்டிருக்கலாமோ எந்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.