முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் எழுவரின் விடுதலை கோரி இன்று சென்னையில் நடத்தப்பட்ட ஊர்வலம் சிறப்பாக அமைந்தது என்று அற்புதம்மாள் தெரிவித்தார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன்,சாந்தன், முருகன் , நளினி உள்ளிட்ட 7 பேர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் எழுவரில் ஒருவரான பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில், எழுவரையும் விடுவிக்கக் கோரி இன்று பேரணி நடைபெற்றது.

முதலில் வேலூரிலிருந்து வாகன பேரணி நடத்துவதாக் இருந்தது ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் பேரணி சென்னை எழும்பூர் ராஜமாணிக்கம் ஸ்டேடியத்தில் இருந்து ஆல்பர்ட் தியேட்டர் வரை நடந்தது.
பேரணியில் அற்புதம்மாள் தலைமை தாங்க அரசியல் கட்சி தலைவர்கள் அன்புமணி ரமதாஸ், சீமான், பண்ருட்டி வேல்முருகன், மல்லை சத்யா, பழ.நெடுமாறன் , வெள்ளையன், திரையுலக பிரபலங்கள் நடிகர் சஙக் தலைவர் நாசர், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், சத்யராஜ் , இயக்குனர்கள் , துணை இயக்குனர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஊர்வலத்தின் இறுதியில் அனைவருக்கும் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்.
பிறகு அற்புதம்மாள் , வழக்கறிஞர் சிவகுமார், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், மணிமேகலை உள்ளிட்ட நால்வரும் பேர் முதல்வரை சந்திக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
Patrikai.com official YouTube Channel