சேலம்

நாளை முதல் ஏப்ரல்  30 வரை சம்பல்பூர் – ஈரோடு வாராந்திர ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது/

விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் – ஈரோடு, ஈரோடு – சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்வே நிர்வாகம் இந்த ரயில்களின் சேவை காலம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

அந்த அறிவிப்பின்[அடின்படி ஒடிசா மாநிலத்தில் இருந்து புதன்கிழமை காலை 11.35 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்  மறுமார்க்கத்தில் ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமை மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு சாம்பல்பூர் சென்றடையும்

இந்த ஈரோடு – சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (08312) வருகிற 14-ந் தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]