திருச்சி’

திருச்சி மார்க்கமாக செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிக்காக மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”மதுரை ரயில்வே கோட்டத்தின் திருச்சி மற்றும் திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி செங்கோட்டை – மயிலாடுதுறை (வண்டி எண்: 16848) நாளை (வியாழக்கிழமை), 14, 17, 28, 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 4, 7, 9, 11-ந்தேதியும், நாகர்கோவில் – சி சிவாஜி மஹ டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16352-) நாளை (வியாழக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 9-ந்தேதியும், குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), இன்று (புதன்கிழமை), 13, 16, 27, 30-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 3, 6, 8, 10-ந்தேதியும், கன்னியாகுமரி – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12666), வருகிற 14, 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11-ந்தேதி ஆகிய நாட்களில் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும்.

இதேபோல், நாகர்கோவில் – கச்சகுடா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16354) வருகிற 14, 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11-ந்தேதி ஆகிய நாட்களில் திருச்சி வழியாக செல்லாமல் திண்டுக்கல் மற்றும் கரூர் வழியாக செல்லும்.

மேலும் மயிலாடுதுறை – செங்கோட்டை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16847) வருகிற 14-ந்தேதி அடுத்த மாதம் 9, 11-ந்தேதியும், கச்சகுடா – நாகர்கோவில் சிறப்பு ரயில் வருகிற 13-ந்தேதியும் அடுத்த மாதம் 10-ந்தேதியும், சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16127) வருகிற 14-ந்தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாமல், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும்.”

எனக் கூறப்பட்டுள்ளது