சென்னை:
திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திமுகவினரிடையே சோகத்தைஏற்படுத்தி உள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 6ந்தேதி அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9ந்தேதி வீடு திரும்பி யநிலையில், இன்று மீண்டும் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் (வயது 81) உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், அவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அப்போலோவில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பதவி வருகிறது.
துரைமுருகன் உடல்நிலை குறித்து திமுக தலைமையோ, அப்போலோ நிர்வாகமோ எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், துரைமுருகன் உடல்நிலை குறித்து திமுக தொண்டர்கள் சோகத்துடன் உள்ளனர்.