விஜய் கையில் வைத்திருக்கும் அந்த அழகான பெண் குழந்தை இன்று பிரபலமான சீரியலில் நடித்து வரும் இளம் நடிகை.

கலர்ஸ் தமிழ் தொலைக்கட்சியில் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ‘இதயத்தைத் திருடாதே’ சீரியலில் அறிமுகமான கதாநாயகி தான் அந்தக் குழந்தை! அவர் பெயர், ஹிமா பிந்து.

ஹிமா பிந்து, ஒரு புகைப்படத்தை நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அன்று தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்தார்.

விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பட்டியலில், ஹிமாவின் புகைப்படமும் சேர்ந்தது. அந்தக் குழந்தை யாரென்று பலருக்கும் தெரியாத நிலையில், சமீபத்தில் சீரியல் நடிகை ஹிமா பிந்து தான் அந்த குழந்தை என்பது தெரிய வந்தது.

https://www.instagram.com/p/CBuaDSbhYK6/

[youtube-feed feed=1]