சென்னை,
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அவசர கால வாகனங்கள் செல்ல தனி வழி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலை துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அவசர கால வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வாகன நெரிசலில் சிக்கி தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்ன ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதி மன்றம்,
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் செல்ல தனி வழி அமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து 4 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.