இத்தனை வருடங்கள் கழித்து முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கவுள்ளார் செந்தில். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இப்படத்தை இயக்கியுள்ளார் .

ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு பிரேம்ஜி நடிப்பில் சத்திய சோதனை என்கிற படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இப்படத்தைத் தயாரித்த சமீர் பரத்ராம், செந்தில் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

செந்தில். கவுண்டமணி – செந்தில் ஆகிய இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்து மறக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகளை அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .