சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9வது முறையாக நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 6-ந்தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள ஜாமின்மனு அக்டோபர் 30ந்தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுடீகிறது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் தனது உடல்நிலையை கூறி ஜாமின் கேட்டு வருகிறார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஜெயச்சந்திரன், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தால். மேலும், மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் (20ந்தேதி) முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவரின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இதனுடன் 9 முறையாக நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.