டில்லி

மிழக அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்மனு செய்துள்ளார்

அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அமைச்சரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த உத்தரவிட்டது.

எனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இன்று இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன், வழக்கறிஞர் ராம்சங்கருடன், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி முறையிட்டார்.

உச்சநீதிமன்றம் இந்த முறையீட்டை நிராகரித்து இந்த மனு அக்டோபர் 30-ந்தேதி உரிய அமர்வு முன் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்தது.

அதே வேளையில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் போது தங்களது தரப்பு கருத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க கோரி அமலாக்கத் துறை சார்பில் வழக்கரிஞர் முகேஷ் குமார் மரோரியா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.