டில்லி

ர்ச்சைக்குரிய சாமியார் ராம் ரகீம் மீதான கொலைக் குற்றத்துக்கு வரும் 18 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளதாக சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ராம் ரகீம் தேரா சச்சா சவுதா என்னும் அமைப்பின் தலைவராக இருந்து வந்தார்.  இவர் சிர்சாவில் ஆசிரமம் நடத்தி வந்தார்.   அங்கு ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.

அவற்றில் இவர் இரு பெண்களைப் பலாத்காரம் செய்த வழக்கில் இவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  கடந்த 2002 ஆம் ஆண்டு ராம் ரகீமின் ஆசிரம மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இதையொட்டி  தொடரப்பட்ட வழக்கில் ராம் ரகிம் உள்ளிட்ட 5 பேர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டது.  நேற்று இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இதை அறிவித்த சிபிஐ  நீதிமன்றம் இதற்கான தண்டனை விவரம் அக்டோபர் 18 அன்று அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.