ராஞ்சி:

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுபிரசாத் யாதவை  குற்றவாளி என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ந்தேதி தீர்ப்பு அளித்துள்ளது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு வழங்கப்பட உள்ள தண்டனை என்ன என்பது குறித்து ஜனவரி 3ந்தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் காலமானதால் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது தண்டனை குறித்து நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன விவகாரத்தில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. 1991-94 வரையிலான காலகட்டத்தில் பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இதில் சில வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், தியோஹர் மாவட்ட கருவூலத்தில் ரூ. 84.5 கோடியை எடுத்தது தொடர்பான வழக்கு தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் லாலு உள்பட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 11 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக மாறி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இ

ந்தவழக்கு விசாரணையை ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஷிவ்பால் சிங், நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் நீதிபதி பிரதீப் குமார் விசாரித்து வந்தார்கள். இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இறுதி வாதம் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 23ந்தேதி அன்று  தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கில் லாலு உள்ளிட்ட17 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த நீதிமன்றம், ஜெகன்நாத்மிஸ்ரா உள்பட 6 பேரை விடுதலை செய்தது.

இந்த வழக்கில் லாலு மற்றும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கான  தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் மரணம் அடைந்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு நேற்று இரங்கல் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டதால் தண்டன விவரம்  நாளை (4ந்தேதி) வெளியிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

லாலுவுக்கு வழங்கப்பட உள்ள தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாலு பிரசாத் யாதவ் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அதன் காரணமாக தண்டனை விவரத்தை நீதிபதிகள் இன்றே வெளியிடுவாக்ரள் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், தண்டனை அறிவிப்பை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.