ஜெட்டா,

ன்னராட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் சமீபத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து  மந்திரிகள்  பொறுப்புகளை வகித்து வந்த அரச குடும்பத்தினர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பபட்டதாகவும், தலைமறைவாகிவிட்டார் என்றும் கூறப்பட்டு வந்த, அப்துல்லாவின் மூத்த மகனான  மிடெப் பின் அப்துல்லா (வயது 65)  நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றதும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அரச குடும்பத்தினரே ஊழலில் ஈடுபட்டாலும் கடும் தண்டனை இருக்கிறது என அவர் அறிவித்தார். பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் அறிவித்தார்.

சவூதியில் அரசர் அப்துல்லாவின் மறைவுக்கு பிறகு பல அரசியல் அதிரடி மாற்றங்கள் நடை பெற்று வருகின்றன. சமீபத்தில், சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரான  மன்சூர் பின் மாக்ரோன் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து பல இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசின் முக்கிய துறை களை வகிக்கும் மந்திரிகளாக இருந்து வந்தனர்.

மறைந்த அரசர் அப்துல்லாவின் மூத்த மகனும், முன்னாள் உயர்மட்டக் காவலர் தலைவராக இருந்து வந்த மிடெப் பின் அப்துல்லா (வயது 65)  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டி ருந்தார்.

இந்நிலையில், இவருக்கும், அரசு தரப்புக்கும்  இடையே ஏற்பட்ட உடன்பாடு காரணமாக அவர் விடுக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், இளவரசர் மிதெப் பின் அப்துல்லா சுமார் 3 வாரங்களுக்கு பின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.