டில்லி:

பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மக்கள் இடஒதுக்கீடும் பெறுவதற்கான (கிரீம லேயர்) ஆண்டு வருமான ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்த 1993ம் ஆண்டு இட ஒதுக்கீடு முறையை வருவாய் மற்றும் அந்தஸ்து அடிப்படையில் நிர்ணயம் செய்யும் முறை மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

jaitly

இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பொது துறை நிதி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. 24 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத் துறை நிறுவனங்களும், பொதுத் துறை நிதி நிறுவனங்களும் இட ஒதுக்கீடு வரயறைக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது.

‘‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இட ஒதுக்கீடு பயனை அடையும் வகையில் இந்த முடிவு எ டுக்கப்பட்டுள்ளது’’ என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

‘‘ இது வரலாற்று சிறப்புமிக்க முடிவு’’ என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் ஜெலாட் தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய அரச வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘இந்த புதிய உத்தரவு ஏற்கனவே இடஒது க்கீடு அடிப்படையில் உயர்பதவியில் இருப்பவர்களின் வாரிசுகளுக்கு பொருந்தாது.

இதன் மூலம் அரசுப் பணியில் கீழ்நிலையில் பணியாற்றுபவர்களின் வாரிசுகள் பயனடைவர். அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை வங்கிகளில் புதிய பதவிகளை உருவாக்கும் விதிமுறைகளுக்கும் மத்திய அமை ச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.