டில்லி
கடன் சுமையால் இயங்க முடியாத நிலையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் மீண்டு வர சிறிதளவு வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்ட கடன் சுமையால் அந்த நிறுவனத்தின் பல சேவைகள் நிறுத்தபட்டன. இந்த விமானத்துக்கு அதிக அளவில் கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கி இந்த நிறுவன பங்குகளை விற்று வேறொரு தலைமை மூலம் நடத்த முயன்றது. பங்குகளுக்கு சரியான விலை கிடைக்காததால் அந்த முயற்சி நடைபெறவில்லை.
ஏற்கனவே ஊழியர்களின் ஊதியத்தை அளிக்கவும் நிதி இல்லாமல் போன அந்த நிறுவனத்துக்கு தினசரி செலவுகளை செய்யவும் பண தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை ஒட்டி ஜெட் ஏர்வேஸ் நிறுஅவனம் தனது சேவைகளை முழுவதுமாக தற்காலிகமாக நிறுத்தியது., இந்த சேவைகள் ஜெட் ஏர்வேஸின் போட்டி நிறுவனங்களுக்கு அரசால் பகிரப்பட்டது.
தற்போது மூத்த இரு நிதி அமைச்சக அதிகாரிகள், “இந்த நிறுவனம் மீண்டு வர இப்போதும் சிறிதளவு வாய்ப்பு உள்ளது. யாராவது இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி மீண்டும் நடத்த முயன்றால் அரசு நிறுவன சேவைகளை மீண்டும் அளிக்க தயாராக உள்ளது.
ஆனால் இதற்கு மிக குறைவான காலமே உள்ளது. தாமதிக்கப்பட்டால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் அளித்தவர்கள் இந்த நிறுவனத்தின் பேரில் தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்கக்கூடும். அப்போது இந்த நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவ்க்கப்படும் அபாயம் உள்ளது.” என தெரிவித்துள்ளனர்.