நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் சாதிக்பாட்சா அவர்களது முகநூல் பதிவு:
திருச்சியில் தலைக்கவசம் அணியாத வாகன ஒட்டிகளை தொடர்ந்து போலீஸார் வாகன சோதனை என்கிற பெயரில் இம்சித்து வருகின்றனர். இதனால் இரண்டு பெண்கள் பலியாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றைய சம்பவத்தில் திருவெறும்பூர் கணேசா ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததில் வாகனத்தில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்க்க தக்கது.
அதே சமயம் எஸ் ஐ / இன்ஸ்பெக்டர்கள் தினமும் குறிப்பிட்ட அளவு ஹெல்மெட் கேஸ் பிடிக்க வேண்டும் என உயரதிகாரிகள் தொடர்ந்து நிர்பந்திப்பதால் தான் கீழ் நிலை அதிகாரிகள் இப்படி அநாகரீகமான வழிமுறைகளை கையாண்டு வழக்கு பதிவு செய்கின்றனர். ஒரு விதத்தில் இவர்கள் அம்பு தான். இவர்களை ஏவி விடும் உயரதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதை அனைத்து கட்சியினர் சமுக நல அமைப்புகள் வலியுறுத்த வேண்டும்.

காவல்துறை உயரதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் :
உங்களது இருப்பையும் சிறப்பாக பணியாற்று கிறீர்கள் என்பதையும் மக்களிடம் பதிவு செய்ய ெஹல்மெட் கேஸ் விவகாரத்தை கையில் எடுப்பதை விட்டு விடுங்கள். திருட்டை கண்டுபிடிப்பது, ரவுடிகளை கட்டுப் படுத்துவது, போக்குவரத்து நெரிசலை சீர் செய்வது என எத்தனையோ கடமைகள் காத்திருக்கிறது அதை செய்து மக்கள் மனதில் நிரந்தரமாய் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு வழிகாட்டயாக போலிஸ் அதிகாரிகள் திரிபாதி, ஜாபர் சேட், கருணா சாகர் என சிலர் இருந்திருக்கின்றனர். அவர்களிடமாவது ஈகோ பார்க்காமல் ஆலோசளை பெற்று செயலாற்றுங்கள்.
[youtube-feed feed=1]