சென்னை: மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சுதாங்கன் பல பத்திரிகைகள் மற்றும் ஊடங்களில் பணியாற்றியுள்ளார். தினமணி நாளேடு, தமிழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் பொறுப்பாசிரியராகவும், சிலை தொலைக்காட்சி களிலும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர் சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.
Patrikai.com official YouTube Channel