டில்லி:

ரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நியூ இன்டஸ்டிரியல் டவுன் பகுதியின் காவல் துணை ஆணையாராக பணியாற்றி வந்தவர் விக்ரம் கபூர். இவர் தான் வசித்து வந்த அரசு குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் இன்று காலை தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஃபரிதாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் கிடைத்த பேப்பரில் இரு காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் மற்றொரு நபரின் பெயர்கள் அதில் உள்ளதாகவும்  ஃபரிதாபாத் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

58 வயதான விக்ரம் கபூர்,  அடுத்தாண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.