சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் டிச.21ல் வழங்கப்படும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், 2024 ஜூன் 21 முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய டகட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2025 ஜனவரி முதல்   முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்தோர்கள் இலவசமாக பயணிக்க டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.  இச்சேவைகளை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்கள் இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பித்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுடுஉள்ளது.

இதுதொடர்பாக  மாநகர போக்குவரத்துக்கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணிக்க வரும் 21-ந்தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்தோர்கள் இலவசமாக பயணிக்க டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.