டில்லி
தமிழக பாஜக மூத்த தலைவரான இல கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக தலைவர்களை மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் முதலில் தெலுங்கானா ஆளுநராகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.
தற்போது அவர் புதுவை மாநில ஆளுநர் பொறுப்பையும் சேர்த்துக் கவனிக்கக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த வரிசையில் தற்போது தமிழக மூத்த பாஜக தலைவரான இல கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இல கணேசன் பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். தவிர அவர் பாஜக தேசிய குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.
Patrikai.com official YouTube Channel