டில்லி:

உச்சநீதிமன்றத்தில் வழக்கு வெளிப்படைத்தன்மை குறித்த பிரச்னை வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் இது தொடர்பான மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை வீடியோவில் பதிவு செய்வதோடு, நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். குடும்ப வழக்குகள், குற்ற வழக்குகள், தனிப்பட்ட நபர்களில் நலன் சார்ந்த வழக்குகளுக்கு மட்டும் இதில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

ஆதார், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்குவது, பார்சி பெண்களின் மத அடையாள வழக்க, முந்தைய வழக்குகளின் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்தல், விபச்சாரம் மற்றும் ஓரினச் சேர்க்கை போன்று அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும் வழக்குகளை வீடியோ பதிவு மற்றும் நேரடி ஒளிபரப்பலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த மனுவில், ‘‘அரசியலமைப்பு வழக்குகள், தேசிய முக்கயத்துவம் வாய்ந்த வழக்குகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்றவை நேரடி ஒளிபரப்புக்கு தகுதியுள்ள வழ க்குகளாகும். நேரடி ஒளிபரப்பு வசதிக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மத்திய அரசு ஏற்படுத்தி கொ டுக்க வேண்டும்.

இதன் பின் பதிவு செய்யப்பட்ட வழக்கு நடைமுறைகளை நீதிமன்றத்திற்கு சொந்தமான பிரத்யேக யூ டியூப் சேனலில் வெளியிடலாம். இது போன்ற வீடியோ, ஆடியோ பதிவுகளுடன் கூடிய நீதிமன்றங்கள் உலகளவில் செயல்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.