டெல்லி:
கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ள ரயில்பெட்டிகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று, கொரோனா தீவிரமாகி வரும் தெலுங்கானா, டெல்லி மாநில அரசுகள் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், நோயாளிகள் தனிமைப்படுத் தப்பட்டு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், தற்காலிகமாக ரயில் பெட்டிகள் கொரேனா வார்டுகளாக மாற்றப்பட்டது. முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 5 மண்டலங்களில் 500 ரயில் பெட்டிகள் தேர்வு செய்யப்பட்டு வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று தேவையான மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை அனுப்ப தெலுங்கானா,டெல்லி அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.
தெலுங்கான மாநிலத்திற்கு 60 ரயில்பெட்டிகள் தேவை என்றும், செகந்திராபாத், கச்சிகுடா, ஆதிலாபாத் பகுதிக்கு அனுப்பி வைக்க ரயில்வேயிடம் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.
அதுபோல டெல்லி மாநில அரசு 10 ரயில்பெட்டிகளை அனுப்பி வைக்கும்படி கோரியுள்ளது.