சென்னை
ஊழலைப் பற்றிப் பேசப் பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”பிரதமர் மோடி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று கூறியிருக்கிறார்.ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும் அதிகரித்து இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டு 609வது இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு?
கார்ப்பரேட்டுகள் மட்டுமே மோடி ஆட்சியால் பயனடைந்தார்கள். தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை..
பாஜக போதைப் பொருள் தடுப்புக்காகக் கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு. பயன்படுத்தி வருகிறது.
இது போன்ற பாசிச, சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிற பிரதமர் மோடிக்கு வருகிற மக்களவைத் தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.”
என்று தெரிவித்துள்ளார்.