சென்னை
தேர்தல் பத்திர மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.

இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சென்னையில் செய்தியாளர்களிடம்..
”பாஜகவினர் தேர்தல் பத்திர மாபெரும் ஊழலை விஞ்ஞான முறையில் செய்துள்ளனர். பிரதமர் மோடி கருப்பு பணத்தை மீட்போம் என்று பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்றும் கூறினார்.
தற்போது பாஜக தான் கருப்பு பணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய்கள் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பாஜகவால் வாங்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் நிதியை பா.ஜ.க மிரட்டி வாங்கி உள்ளது.
மிகப்பெரிய ஊழல் நடந்துள்ள இதைப் பற்றிப் பேசினால் வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது. பிரதமர் மோடியால் இந்த மோசடியில் இருந்து தப்பிக்க முடியாது.”
என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]