சென்னை

விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமி திரும்பிய சுனித வில்லியம்ஸுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில்,

”இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், தனது முதல் பயணத்தில் விண்கலத்தை இயக்கிய முதல் பெண் என்ற வரலாற்று சாதனை படைத்தவர்.

இன்று அவர் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமியில் கால் பதித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடுமையான சோதனை நேரத்திலும் உறுதியாக இருந்து அவர் சாதனை படைத்துள்ளார்.

அவரது சாதனை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கும்.”

என்று பதிவிட்டுள்ளார்.