கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

திரையுலகினரும் உதவ ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.இதனை தொடர்ந்து பெரும்பாலானோர் உதவி புரிந்தனர் .

இதில் எவ்வளவு நிதியுதவி வந்தது, எப்படிப் பிரித்துக் கொடுக்கிறோம் உள்ளிட்டவற்றை கூறியுள்ளார் ஆர்.கே.செல்வமணி .

2 கோடி 45 லட்ச ரூபாய் நிதியாக உதவி செய்துள்ளனர். 2400 அரிசி மூட்டைகள் உதவியாகக் கிடைத்துள்ளன. 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு சங்கத்துக்கும் 100 பேரை வரவழைத்து சமூக இடைவெளி விட்டு உதவிகள் செய்து வருகிறோம். இதுவரைக்கும் 15 ஆயிரம் பேருக்கு உதவி செய்திருக்கிறோம். இன்னும் 10 ஆயிரம் பேருக்குத் தேவைப்படுகிறது. ஒரு நபருக்கு 25 கிலோ அரிசியும், 500 ரூபாய் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும் அளித்து வருகிறோம்.

25 ஆயிரம் பேருக்கும் கொடுப்பதற்கு 3.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. 2 கோடி 45 லட்ச ரூபாயை வைத்து முதலில் கொடுத்து வருகிறோம். இதர நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்வதை வைத்து இதை முடிக்கவுள்ளோம். அனைத்து உறுப்பினர்களுக்குமே இந்த உதவியைச் செய்வதாகக் கூறியுள்ளோம். அதை நிச்சயமாக இன்னும் 2 – 3 நாட்களுக்குள் முடித்துவிடுவோம்.

உதவி செய்தவர்களுக்கு நன்றி என கூறினார் செல்வமணி .