விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ் (Aloor Sha Navas) அவர்களின் முகநூல் பதிவு சந்தைகளில் மாடுகளை விற்க, மோடி அரசு கொண்டுவந்த தடையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தவர் தோழர் செல்வ கோமதி.

அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உச்ச நீதிமன்றமும் அண்மையில் தீர்ப்பளித்தது. நாட்டையே உலுக்கிய மாட்டிறைச்சி பிரச்சனையில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற, தோழர் செல்வ கோமதி அவர்களை, இன்று திண்டுக்கல்லில் த.மு.எ.க.ச நடத்திய கருத்தரங்கில் பாராட்டி சிறப்பித்தேன்.
அசைவ உணவுப் பழக்கம் இல்லாத, முட்டையை கூட இதுவரை உண்ணாத தோழர் செல்வ கோமதி தான், அசைவ உணவு உண்ணும் மக்களின் உரிமைக்காகப் போராடி தடையை உடைத்துள்ளார். இந்தப் புரிதலும் நல்லுறவும் தான் இந்த மண்ணின் அடையாளமே தவிர, பிரிவினையோ பேதமோ அல்ல
[youtube-feed feed=1]