புனே

எல் எக்ஸ் மூலம் பொருள் விற்பனை செய்ய முயன்ற ஒரு பெண்ணிடம் பணம் பறிக்க நடந்துள்ள மோசடியைப் பற்றி அந்தப் பெண் முகநூலில் பதிந்துள்ளார்.

புனேவை சேர்ந்தவர் பவித்ரா.  அவர் ஓ எல் எக்ஸ் வெப்சைட்டில் ஒரு பொருளை விற்பதற்காக விளம்பரம் செய்துள்ளார். அப்போது அவருக்கு நேர்ந்த அனுபவத்தை பற்றி அவர் முகநூலில் பகிர்ந்ததன் தமிழாக்கம் இதோ :

தற்போது நாம் அனைவரும் டாக்ஸி புக் செய்வதிலிருந்து டிரான்சாக்‌ஷன் ஆஃப் மணி வரை ஆன்லைனில் செய்தே பழகி விட்டோம்.  எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை சொல்கிறேன்.  நான் ஒரு பொருளை (குழந்தைகளின் தள்ளுவண்டி) விற்க ஓ எல் எக்ச் நிறுவனத்தின் மூலம் விளம்பரம் செய்திருந்தேன்.  நான் அதற்கு ரூ.3500 விலை நிர்ணயம் செய்திருந்தேன்.  யாரும் அதை வாங்க முன்வரவில்லை.  கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆன பின், எனக்கு ஓ எல் எக்ஸ் சாட் மூலம் ஒருவர் அந்தப் பொருள் விற்பனை ஆகி விட்டதா எனக்கேட்டார்.  நான் இல்லை என சொன்னேன்.  ”அதன் விலை ரூ.3500 தானா?  புகைப்படங்களை பார்க்கும் பொழுது புதியது போல் தோன்றுகிறதே. விற்கக்காரணம் என்ன?” என அந்த நபர் கேட்டார். நானும் அது புதியது போலவே உள்ளது.  எந்தக் கோளாறும் இல்லை என பதிலளித்தேன். தன்னை விஷால் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் புனேவில் உள்ள தனது சகோதரிக்கு பரிசளிக்க இதை வாங்குவதாகவும், தான் மும்பையில் இருப்பதால் பணத்தை ஆன்லைன் மூலம் எனது வங்கிக் கணக்குக்கு டிரான்ச்ஃபர் செய்து விடுவதாகவும் கூறினார்.

நானும் எனது அக்கவுன்ட் விவரங்களை அவருக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்தேன்.  சில நிமிடங்களுக்குள் எனக்கு ஒரு குறும்செய்தி வந்தது.  அது 59444 என்னும் நம்பரில் இருந்து வந்தது.  எனது வங்கி அக்கவுண்டில் ரூ.13500 மாற்றப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சொல்லி இருந்தது.  உடனே அவரிடமிருந்து வாட்ஸ்அப் மூலம் தவறுதலாக ரூ 10000 அதிகம் அனுப்பியதாகவும் அதை திருப்பி தருமாறும் மெசேஜ் வந்தது.  நானும் அவருடைய அக்கவுண்ட் நம்பரைக் கேட்டேன்.  உடனே அவர் தனது தாயாரின் அறுவை சிகிச்சைக்கு அவசரமாக தேவைப்படுவதால் தனது தாயாரின் மொபைல் நம்பருக்கு பேடிஎம் மூலம் மாற்றச் சொன்னார்.  ஒரு நிமிடத்திற்குள் மீண்டும் மேசேஜ், உடனடியாக அனுப்பச் சொல்லி.  எனக்கு ஏதோ சந்தேகம் தட்டியதால் நான் எனது வங்கி அக்கவுண்டை செக் செய்ததில் அப்படி ஏதும் பணம் வரவில்லை என தெரிந்தது.  நான் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு அவருடைய வங்கி எது எனக் கேட்டேன்.  அவர் ஐசிஐசிஐ வங்கி எனவும், அதிலிருந்து நிமிடத்தில் பணப் பரிமாற்றம் நடக்கும் எனவும் தெரிவித்தார்.

நான் எனது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகிய போது,  சில நிமிடங்களுக்குள் பணப் பரிமாற்றம் சாத்தியமே இல்லை எனக் கூறினார்கள்.  நான் விஷாலை தொடர்பு கொண்டு பணம் என் கணக்கில் வந்ததும் மாற்றம் செய்கிறேன் என தகவல் அளித்தேன்.  வங்கியில் எனக்கு கிடைத்த தகவலின் படி பணம் மாற்றம் செய்யும் அக்கவுண்ட் நம்பரை புக் செய்து அதை சேர்க்கவே குறைந்தது அரை மணி நேரம் ஆகும் என்பதே.

அதனால் நான் இந்த மோசடியை புரிந்துக் கொண்டேன்.  இரண்டு மணி நேரம் கழித்து விஷால் ஃபோன் செய்த போது நான் அதை சட்டை செய்யவில்லை. “தயவு செய்து இது போல ஏமாற்றுவேலைகளை இனியும் செய்ய வேண்டாம்.  உங்கள் தாயாரை உங்கள் மோசடிக்காக அறுவை சிகிச்சை அறைக்கு அடிக்கடி அனுப்பாதீர்கள்” என மெசேஜ் அனுப்பினேன்.  அவரிடமிருந்து அதற்குப் பிறகு பதில் இல்லை.

அவர் எண் +91 9967957477

பே டி எம் எண் +91 8948413565

என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மக்களே! உஷார்!! உஷார்!!!