வாஷிங்டன்:
தன்னை எக்ஸ்போஸ் செய்துகொள்வதில் இந்திய பிரதமர் மோடி ரொம்பவே ஆர்வமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த கதைதான். பல லட்சம் மதிப்புள்ள உடைகள், செல்ஃபிக்கள், போஸ்கள் என்று வலம் வருபவர்.
ஆனால் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது, அந் நாட்டு பாராளுமன்றத்தில் பேசினார், எம்.பிக்களுடன் அளவளாவினார், அதிபரை சந்தித்தார்.. ஆனால் அவர்களுடன் ஒரு செல்ஃபி கூட எடுத்துக்கொள்ளவில்லை.
இது பலரையும் உறுத்தியது. விசாரித்தில், செல்ஃபி எடுக்க அமெரிக்க அரசு தடை போட்டிருப்பது தெரியவந்தது.
அதாவது, மோடி அமெரிக்கா வருவதற்கு முன்பே அனைத்து எம்.பி.களுக்கும் உதவியாளர்களுக்கும் அமெரிக்க அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், “நம் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு நாட்டின் தலைவருடன் செல்ஃபி எடுப்பது முறை அல்ல” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனால்தான் அமெரிக்க எம்.பிக்களோ அவர்களது உதவியாளர்களோ மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவில்லையாம்.
“முன்பு தன்நாட்டுக்குள் நுழைய மோடிக்கு விஸா தர மறுத்தது அமெரிக்க அரசு. அது போல இதுவும் ஒரு நடவடிக்கையா” என்றால், அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் அவசரமாக மறுக்கிறார்கள்.
“வெளிநாட்டு தலைரை தொந்தரவுசெய்யவேண்டாம் என்பதற்காகத்தான் இந்த தடை” என்கிறார்கள் புன்முறுவலுடன்.