ராமநாதபுரம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் அடுத்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல் வரலாம் எனக் கூறி உள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இதனால் இந்த ஆட்சி எந்நேரமும் கவிழலாம் என்னும் பேச்சு அரசியல் நோக்கர்களிடம் காணப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல் பாஜகவின் ஒரு சில முடிவுகளுக்கு கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையி; ராமநாதபுரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம்,
“அடுத்த ஆண்டே மத்தியில் தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. மத்திய பா.ஜ.க. ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. தற்போதைய ஆட்சி என்பது நீண்ட ஆயுள் கொண்ட ஆட்சியாக எங்களுக்கு தெரியவில்லை. எனவே 2025-ல் நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் வரலாம், அல்லது 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுடன் சேர்ந்தும் வரலாம்.”
என்று கூறியுள்ளார்.