
சென்னை,
சேகர் ரெட்டி கூட்டாளிகளான இரண்டு பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல தொழில்அதிபர் சேகர் ரெட்டி மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறையினரின் அதிரடி சோதனையை தொடர்ந்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு உதவியாக அவரது கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இன்று விசாரணைக்கு வந்த ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ நீதி மன்ற நீதிபதி நிபந்தரனை ஜாமினில் அவர்கள் இருவரும் விடுவிக்கவும், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தினமும் இருவரும் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Patrikai.com official YouTube Channel