சென்னை

ணல் சுரங்கத் தொழில் மன்னன் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப் பட்ட பண விவகாரத்தில் புதிய சிக்கல் கிளம்பி உள்ளது.

எஸ் ஆர் எஸ் மைனிங் கம்பெனி என்னும் மணல் சுரங்க நிறுவன உரிமையாளர் சேகர் ரெட்டி, மற்றும் அவர் உறவினர்களிடம் வருமான வரி அதிகாரிகள் சோத்னையிட்டதில் ரூ. 2000 புதிய நோட்டுக்கள் கோடிக்கணக்கான மதிப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.  இது குறித்து சி பி ஐ விசாரணை நடத்தி வந்தது.  சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நடந்த ரெய்டைத் தொடர்ந்து அவர் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்

தற்போது சி பி ஐ விசாரணையின் போது ரிசர்வ் வங்கியிடம் எந்தெந்த வங்கிகளில் இருந்து அந்த நோட்டுகள் பெறப்பட்டிருக்கும் என கேட்கப்பட்டது.  அதற்கு ரிசர்வ் வங்கி தங்களிடம் எந்தெந்த வங்கிகளுக்கு எந்தெந்த எண்கள் கொண்ட ரூ.2000 கரன்சி நோட்டுக்கள் வழங்கப்பட்டன என்னும் விவரங்கள் இல்லை என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விவரஙகள் தெரியாததால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இதனால் இந்த வழக்கின் விசாரணையில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.