கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தொற்றுநோயை தடுக்கும் வகையில் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. ஆனால் பலருக்கு தடுப்பூசி போடுவதில் தயக்கம் உள்ளது .

இதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]