18 வயது நிரம்பிய ஆண் பெண் என அனைவருக்கும் சமமான ஊதியம் அளித்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் காங்கிரஸ் அரசால் 2005 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்’ (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)).
இந்த திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை பாஜக மேற்கொண்டு வருகிறது, இதன் ஒரு அங்கமாக சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், “இது சோம்பேறிகளை உருவாக்கும் திட்டம், நூறு நாள் வேலை திட்டம் ஒரு வெட்டி வேலை” என்று பேசினார்.
சீமானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து சீமான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறினார்.
இந்த நிலையில் விவசாய சின்னம் வைத்துக்கொண்டு விவசாயிகளை கொச்சையாக பேசிய சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சி தேர்தலில் மரணஅடி கொடுத்தனர் தமிழக மக்கள்.
இந்த நூறு நாள் வேலை திட்ட கார்டு யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.@Samaniyantweet @VigneshAnand_Vm @IlovemyNOAH2019 @gokula15sai @angry_birdu @KarthikSubbur11 pic.twitter.com/Wuo0Y9tKuk
— ரெ. பத்மநாபன் (@rapadmanaban) October 17, 2021
இதனைத் தொடர்ந்து, தற்போது சீமானின் தாயார் அன்னம்மாள் அவரது சொந்த ஊரான அரணையூரில் நூறு நாள் வேலை திட்ட (MNREGA) பயனாளியாக உள்ளதும், இந்த திட்டத்தின் மூலம் அவர் அந்த கிராமத்தில் பல்வேறு பணியை மேற்கொண்ட தகவலும் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.
சீமானின் தாயார் இன்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிகிறார். அவர் முடித்த பணிகள் பற்றிய குறிப்புகள் அரசு வலைத்தளத்தில் இருக்கிறது. இவரையும் இந்த திட்டம் சோம்பேறி ஆக்கி விட்டது என்று சொல்லுவாரா #சங்கி_சீமான் ?https://t.co/s1iO4KC7ae
Credit: @rapadmanaban https://t.co/c9VOp4AssZ pic.twitter.com/e9uRBsKvjP
— பூதம் (@angry_birdu) October 17, 2021
வியர்வை சிந்தி உழைத்து சாப்பிடும் ஒரு தாயின் பிள்ளையாக இருந்து கொண்டு வியர்வை சிந்தாமல் லட்சக்கணக்கில் செலவு செய்து கூட்டத்தைக் கூட்டி விவசாயிகள் குறித்து அவதூறாக பேசி வரும் சீமானை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருவதுடன், நூறு நாள் அல்ல ஆண்டுக்கு ஒரு நாளாவது மண்ணில் இறங்கி வேலை செய்ய முடியுமா ? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.