download
ன்று மாலை சீமான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில்   ஒரு அமைப்பினரால்  கலாட்டா ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
“முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. இனி என்ன செய்யலாம்” என்ற தலைப்பிலான இந்த புத்தகம்  . இன்று மாலை  சென்னை வடபழனி ஆர்.கே.வி. திரையரங்க வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி,   சி.பி.ஐ. கட்சியின் சி. மகேந்திரன்,    வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன்,  உட்பட பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
இதில் பெங்களூரைச் சேர்ந்த பால்நியூமன் என்ற மனித உரிமை செயற்பாட்டாளரும் கலந்துகொள்கிறார்.
இந்த நிலையில், “இளைய தலைமுறை கட்சி” என்ற  ஒரு அமைப்பு, “மேற்கண்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்  பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளர் ஆவார். இலங்கையில் 2009ம் ஆண்டு  நடந்த இனப்படுகொலை சம்மந்தமான டப்ளிங் தீர்ப்பாயத்தில் நடந்த போது, விடுதலைப் புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும்  எதிராக அறிக்கை தாக்கல் செய்தார் பால் நியூமன்.

நிகழ்ச்சி அழைப்பிதழ்
நிகழ்ச்சி அழைப்பிதழ்

குழந்தகளை தமிழீழ போரில் விடுதலை புலிகள் ஈடுபடுத்னர்.  அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடுங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொண்டனர்.  அதற்கு பயந்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். அதையும் மீறி புலிகள்  குழந்தைகளை தூக்கிக் கொண்டு போய் கட்டாயமாக சேர்த்தனர். அவ்வாறு திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக் கலைப்பை விடுதலைப் புலிகள் செய்தனர்.  போரின் இறுதிக் கட்டத்தில் ,விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தினர் என்று இவர் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளரான இவரது அறிக்கை அவர்களின் கட்சி தலைமை சீமானுக்கு தெரியாமல்  இருக்க வாய்ப்பில்லை.  இது சம்பந்தமான கேள்விகள் எழுந்தபோது, பால்நியூமனே கனடா வானொலியில் பேட்டி கொடுத்தபோது, உண்மையைத்தான் எழுதினேன் என்றார்.
அந்த ஆடியோவின் லிங்க் இதுதான்:  https://m.facebook.com/story.php?story_fbid=195627727497262&id=100011501076165
மேலும் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒரு பிரிவான வீரத்தமிழர் முன்னணி சார்பில் கண்டி நாயக்கர் என்னும் ஆவணப்படத்தில் தமிழர்களை கொன்றது சிங்களர்கள் இல்லை நாயக்கர்கள் தான் ஒரு அப்பட்டமான பொய்யையும், வரலாற்று பிழையையும் உருவாக்கி தமிழீழ  போராட்டத்தை திசை திருப்பும் வேலையை நாம் தமிழர் கட்சியினர் செய்து வருகிறார்கள்.
ஆகவே இன்று நடக்கும் புத்தகவெளியீட்டு கூட்டத்தில் இவை குறித்து சீமான் மற்றும் பால் நியூமன் ஆகியோரிடம் எங்களது இயக்க இளைஞர்கள் கேள்விகளைக் கேட்பார்கள்” என்று இளைய தலைமுறை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாறன் தாணப்பன்  தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சீமான் கலந்துகொண்ட புலிப்பார்வையில் பாடல் வெளியீட்டு கூட்டத்திலேயே இந்த அமைப்பினர் அவரிடம் பல கேள்விகள் கேட்டதும், அதனால் தள்ளுமுல்லு ஏற்பட்டு பரபரப்பு  உருவானதும் அனைவரும் அறிந்ததே.
ஆகவே இன்றைய நிகழ்ச்சியில் அதே போல பரபரப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தலைமுறை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  மாறன்  தாணப்பனை தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவரது எண் சுவிட்ச் ஆஃப்பில் இருந்தது.
“முள்ளிவாய்க்கால் முடிவல்ல..” புத்தகத்தை எழுதிய பா. ஏகலைவனை தொடர்புகொண்டு கேட்டபோது, “இது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. பலதரப்பட்ட கருத்துள்ளவர்களையும் அழைத்துள்ளேன். அவர்களிடம் மாறுபட்ட கருத்துடையவர்கள் கேள்வி கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் அவரவர் உரிமை” என்றார்.