சென்னை: நடிகை விஜயலட்சுமிக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதல் தொர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சீமான் தரப்பு  மன்னிப்பு கோரி மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி பல ஆண்டுகளாக புகார் கூறி வருகிறார். இதுதொடர்பாக அவ்வப்போது சீமானை கழுவி ஊற்றும் வகையில் வீடியோ வெளியிட்டும், கண்ணீர் மல்க அழுதுகொண்டே புகார்களை கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமிழ்நாடு காவல்துறையில் பல முறை புகார் கூறி உள்ள நிலையில், விசாரணைக்கு சீமான் ஆஜராகி விளக்கமும் அளித்துள்ளார். மேலும் இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையில், தன்மீதான விஜயலட்சுமியின் வழக்கை  ரத்து செய்யக் கோரி சீமான்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு செப்டம்பர் 12ந்தேதி  நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில்  விசாரிக்கப்பட்டது. அப்போது விஜயலட்சுமி தரப்பில் ஆ%ஜரான வழக்கறிஞர்,  சீமான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது திருமணம் செய்வதாக கூறிய உறுதியளித்தார். அதனடிப்படையில் இருவரும் இணைந்து இருந்தோம். ஆனால் அதன் பின்பு குற்றம் சாட்டப்பட்ட நபர் தன்னை கைவிட்டார்.  பின்னர் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடிப்படையாகக் கொண்டு சீமான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக தன்னைக் குறித்து அவதூறாகவும் பேசி வருகிறார்.

இந்த விவகாரத்தில் கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்கிறோம் சம்பந்தப்பட்ட நபர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள்,  இந்த விவகாரத்தில் முதலில் சீமான் தரப்பு தனது மன்னிப்பு கோரிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் சீமான் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய  மனுவை நாங்கள் ஏற்க மாட்டோம். மேலும் ஏற்கனவே விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்ற அந்த இடைக்கால உத்தரவை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.