சென்னை: பெரியார் குறித்து விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு எதிராக தபெதிகவினர் இன்று போராட்டம் நடத்தினர்.  சென்னை மற்றும் புதுச்சேரியில் தபெதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், சில இடங்களில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்த, தெபெதிகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், “விஜயை முதலில் நேசித்த நீங்கள் தற்போது ஏன் அவருடன் முரண்பாடு” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், “அண்ணன் தம்பி பாசம் என்பது வேறு, கொள்கை கோட்பாடு முரண் என்பது வேறு. அவர் பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் அவர் கொள்கை வழிகாட்டி எனும் கேள்வி கேட்க வேண்டியது இருக்கிறது” என்று கூறிவிட்டு, பெரியாரின் பெண்ணிய உரிமை, பகுத்தறிவு, சமூகநீதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து  கடுமையாக விமரசனம் செய்திருந்தார்.

இதற்கு  ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமானுக்கு எதிராக களமிறங்கி உள்ள  தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன், பெரியார் குறித்து சொன்ன கருத்துக்கான ஆதாரத்தை கேட்டு சீமானின் வீட்டிற்கு நேரில் செல்லவுள்ளதாக அறிவித்தார். சீமான் தான் கூறியது குறித்து  ஆதாரம் தர வேண்டும் என்று அறிவித்துள்ள  பெரியார் திராவிடர் கழகத்தினர்,  அல்லது அவர் பேசிய திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி,   இன்று காலை சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.‘

 சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்தனர். அதேநேரம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானின் வீட்டிற்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் காரின் பின்பக்க கண்ணாடியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் உடைத்தனர்.

இதையடுத்து அங்கு நாம் தமிழர் கட்சியினரும் குவிந்ததால், பதட்டமான சூழல் நிலவ, போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சுமார் 20 பேரை கைது செய்த போலீசார்  கைது செய்து, அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சூர்யா கிருஷ்ணமூர்த்தி . பெரியாரின் பெண்ணியம் குறித்து  சீமான் எதனை ஆதாரமாக வைத்துப் பேசுகிறார்? என்று விளக்கினார்.   தொடர்ந்து சீமானின்  நீலாங்கரை   வீட்டின் அருகே எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வகையில் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தினர். இந்த சம்பவங்களால் அந்தப் பகுதி சற்று பரபரப்பானது.

இந்த நிலையில் சீமான் இன்று இன்று புதுவை நெல்லித்தோப்பில் உள்ள கீர்த்தி மகாலில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள திட்டமிட்டு இருந்தார். இந  கூட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் சீமான் காலை 11 மணிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து,  புதுவைக்கு வரும் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களுக்கு ஆதாரம் கேட்கப் போவதாக புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர்.  அதைத்தொடர்ந்து சீமான் வரும் பாதையான,  நெல்லித்தோப்பு சுப்பையா சிலை சதுக்கம் அருகே இன்று காலை வீரமோகன் தலைமையில் காலை  10.30 மணியளவில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஒன்று கூடினர்.  இவர்களுடன்,, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, திராவிடர் கழகம் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டம், நெல்லிக்குப்பம் சுப்பையா சிலை சதுக்கத்திலிருந்து கீர்த்தி மகாலை நோக்கி முன்னேற முயன்றனர். அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் மணிமேகலை பள்ளி அருகே சீமானை வரவேற்க ஒன்று கூடியிருந்தனர்.  இவர்கள் கோஷமிடுவதை கண்ட அவர்களும் எதிர் கோஷமிட்டனர். இதனால்,  இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசி எதிர்கோஷம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.

இதையடுத்து, புதுச்சேரி போலீசார், இரு தரப்புக்கும் இடையே   பேரிகார்டு வைத்து   தடுத்தனர்.  ஆனால், போலீசாரையும், பேரிகாடுகளையும்  தள்ளிவிட்டு இருதரப்பினரும் முன்னேற முயன்றதுடன், ஒருவருக்கொருவர்  செருப்பு, கற்களை வீசினர். பெரியார் திராவிடர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் கொடிகளை பிடுங்கி கிழித்து எறிந்தனர். சீமான் உருவப்படத்தை அவமதிப்பு செய்தனர்.

இதையடுத்து போலீசார்  இருதரப்பையும்  அங்கிருந்து அகற்றினர்.  முரண்டு பிடித்த சிலரை  போலீசார்  குண்டுக்கட்டாகத் தூக்கி வேன், பஸ்களில் ஏற்றி அவர்களை அப்புறப்படுத்தினர். சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.