ஜெ.வை பார்க்க குவிந்த சசிகலா சொந்தங்கள்

Must read

சென்னை:
ருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க, அவரது உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் உறவினர்கள் நேற்று வந்தனர்.

சசிகலா - ஜெயலலிதா
சசிகலா – ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர் இளவரசியும் அருகில் இருந்து கவனித்துக் கொள்கிறார்கள்.  மற்ற எவரும் ஜெயலலிதாவுடன் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்த சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வெளியே காரில் புறப்பட்டுச்சென்றார்.
திவாகரன் - பிரபாவதி
திவாகரன் – பிரபாவதி

தினமும் இரவு எட்டு  மணிக்கு , அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியேறும் சசிகலா, ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சசகலாவின் உறவினர்கள் வந்தனர். டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதி,  திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் வந்து சென்றனர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதி வந்து சென்றார்.

More articles

Latest article