மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கில் இருந்து விடுவிப்பு: குருமூர்த்திக்கு டில்லி உயர்நீதி மன்றம் கண்டனம்

Must read

டில்லி:

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு குறித்து டிவிட்டரில் அவதூறாக பதிவிட்ட, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது,  “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கேட்டால்தான் வழக்கில் இருந்து விடுவிப்போம்” என்று   டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஊழல் வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக டில்லி உயர்நீதி மன்றம் வழங்கியதாகவும், இதற்காக காரணம் தீர்ப்பை வழங்கிய   நீதிபதி முரளிதர்  ப.சிதம்பரத்திடம் வழக்கறிஞராக வேலை பார்த்தவர் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டில்லி உயர்நீதி மன்றம் தானாகவே குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குருமூர்த்தி தரப்பில் இருந்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய டில்லி உயர்நீதி மன்றம், குருமூர்த்திக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கில் இருந்து  விலக்கு வேண்டுமென்றால், நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

More articles

Latest article