டெல்லி

பிவிபி அமைப்பினர் டெல்லியிலுள்ள பொதிகை இல்லத்தை முற்றுகை  இடுவதாக எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச் சம்பவத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

அண்ணா பல்00கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்கி உள்ளது.

அண்ணா பல்கலை. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்தும், மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு பாதுகாக்கிறது எனவும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் டெல்லி பொதிகை இல்லத்தை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

இதையொட்டி டெல்லியில் உள்ள பொதிகை இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.