டில்லி
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்கி ஏந்திய டெல்லி காவலர் குழு, பாதுகாப்பு அளித்து வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் இனி அவருக்கு அதைவிட உயர் பாதுகாப்பான ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க ஒப்புதல் அளித்து ஜெய்சங்கரின் பாதுகாப்பு பொறுப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் (சி.ஆர்.பி.எப்.) ஒப்படைத்துள்ளது.
இதனால் நாட்டின் எந்த பகுதிக்கு ஜெய்சங்கர் சென்றாலும், துப்பாக்கி ஏந்திய 14 அல்லது 15 சி.ஆர்.பி.எப். கமாண்டோக்கள் 24 மணி நேரமும் ‘ஷிப்ட்’ அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.