டில்லி

போர் சூழ்ந்த இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 212 இந்தியர்கள் விமானம் மூலம் டில்லிக்கு வந்துள்ளனர்.’

இன்று 7 ஆம் நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பல இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கிக்கொண்டதால் அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது.

இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி அதன்படி, டில்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்பட்டது.  முதல் கட்டமாக அந்த விமானம் மூலம் 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

முதல் மீட்பு விமானம் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை டில்லி வந்தடைந்தது. டில்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார்.

இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேலும் துரிதப்படுத்தியுள்ளது.