கோவை:

புதிய கல்விக்கொள்கை குறித்து கோவையில் ரகசியமாக நடைபெற்ற  கருத்துக்கேட்பு கூட்டம்,  தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர் கோவை ராமகிருஷ்ணனால் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து மக்களிடம் கருத்துக் கேட்டப்பிறகே அமல்படுத்தப்படும் என மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, புதிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கும் வகையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழகஅரசும் அறிவித்தது.

இந்த நிலையில், கோவை பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரியில் எந்தவித முன்அறிவிப்புமின்றி, சில ஆதரவாளர்களுடன்  மிக ரகசியமாக நடத்தபட்ட கல்விக்கொள்கை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து கேள்விப்பட்ட  கோவை.ராமகிருட்டிணன், கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்து, கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.அதைத்தொடர்ந்து கருத்துக்கேட்பு கூட்டம் நிறுத்தப்ட்டது.