திருச்சி
வரும் 12 ஆம் தேதி முதல் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரில் இடைநிலை ஆசிரியர்கள் போராட அறிவிப்பு விடுத்துள்ளனர்.

இன்று திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரத்தில் இடைநிலை ஆசிரியர்களின் செயற்குழு கூட்டம் நடந்துள்ளது. அப்போது ஆசிரியர்கள் சம வேலைக்குச் சம ஊதியம் கோரி போராட்ட நடத்த முடிவு செய்துள்ளனர்..
அதன்படி வரும் 12 ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்குச் சம ஊதியம் என்று கோரி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இத போராட்டம் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் விரைவில் தேர்வுகள் நடைபெற உள்ளன இந்த வேளையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்; இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]