காலே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது இலங்கை அணி.

அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்களை அடித்தார். நிரோஷான் டிக்வெலா 92 ரன்கள் அடித்து அவுட்டானார். தில்ருவன் பெரேரா 67 ரன்கள் அடித்தார். முடிவில், 139.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்களை சேர்த்தது இலங்கை அணி.

இங்கிலாந்து தரப்பில், உலக சாதனை செய்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை அள்ளினார். மார்க் வுட்டுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், ஜானி பேர்ஸ்டோ 24 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 67 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

 

 

[youtube-feed feed=1]