திருவனந்தபுரம்
கொரோனா வைரசால் தாக்கப்பட்ட இரண்டாம் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது.
சீனாவில் இதுவரை 304 பேர் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்குதல் உலகின் 22 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறியப்பட்டார்
இந்நிலையில் கேரள மாநிலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றொருவர் கண்டறியப்பட்டது தெரிய வந்துள்ளது.
அவர் சீனா சென்று வந்தவர் எனவும் தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel