டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தலைமறைவாக உள்ள மெகுல்சோக்சியின் டிமேட் கணக்கு உள்பட அனைத்து வங்கிக்கணக்குகளை முடக்க செபி உத்தரவிட்டு உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் மோடி நிதி மோசடி செய்துவிட்டு தலைமறைவான பிரபல வைர வியாபாரி நீர்வ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிலையில், , தற்போது லண்ட னில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோஷியும் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.
மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. பங்குச்சந்தைகளை ஏமாற்றியது தொடர்பாக மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் ரூ.5.27 கோடி நிலுவை செலுத்த வேண்டி உள்ளது.
இந்த தொகைகளை செலுத்துவதற்கு ஈடாக மெகுல் சோக்சியின் வங்கிக் கணக்குகள், டீமேட் கணக்குகளை முடக்கி வைத்து, அதை இணைக்க வேண்டும் என்றும், மெகுல் சோக்சி மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் தனேஷ் ஷீத் வங்கிக் கணக்குகள், லாக்கர்களையும் முடக்கி வைக்க செபி உத்தரவிட்டுள்ளது.