டில்லி
என் டி டி வி நிறுவனம் தனது பங்கு பற்றிய விவரங்களை கடந்த 2012ல் சரியான நேரத்தில் அளிக்கவில்லை என்னும் பங்குச்சந்தைகளின் புகாரை செபி தள்ளுபடி செய்து விட்டது.
செபி என்பது செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா என்னும் பங்கு சந்தை பரிவர்த்தனை நிறுவனத்தின் சுருக்கமான பெயராகும். இந்த நிறுவனத்துக்கு மார்ச் 31 ஆம் தேதி அன்று உள்ள நிலவரப்படி ஏழு நாட்களுக்குள் அனைத்து நிறுவனங்களும் தங்களின், உரிமையாளர், பங்குகளின் விவரங்கள், பங்குதாரரின் விவரங்கள் ஆகியவற்றை அளித்தாக வேண்டும்.
கடந்த 2012ஆம் வருடம் பிரணாய் ராய் நடத்தும் என் டி டி வி நிறுவனம் இந்த விவரங்களை 64 நாட்கள் தாமதமாக அளித்ததாக பாம்பே பங்குச் சந்தையும், ஒரு நாள் தாமதமாக அளித்ததாக தேசியப் பங்குச் சந்தையும் புகார் அளித்திருந்தன. ஆனால் என் டி டி வி நிறுவனத்தின் உரிமையாளர்கள் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய், இந்த நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங் பிரவேட் லிமிடெட் ஆகியோர் இந்த குற்றச்சாட்டு தவறு எனக் கூறி தங்களிடம் இருந்த ஆவணங்களை அளித்தனர்.
இந்தப் புகாரை விசாரித்து ஆய்வு செய்த செபி தற்போது அந்தப் புகாரை ரத்து செய்துள்ளது. விசாரணை முடிவில் இந்த புகாரை ரத்து செய்துள்ளது. இது குறித்து என் டி டி வி மீது எந்த ஒரு அபராதமும் விதிக்கப்பட மாட்டாது எனவும் ஆவணங்களை சரிபார்த்ததில் எந்த ஒரு தாமதுமும் ஏற்படவில்லை எனவும் செபி கூறியது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளும் தவறுதலான அடிப்படையில் புகார்கள் அளிக்கப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ளன.