மதுரை: மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபற்றி ஏற்பட்ட நிலையில், இன்று காலை  எடப்படி பழனிச்சாமி அவசரமாக டெல்லி விரைந்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக தலைமை, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிப்ரவரி 1ந்தேதிஅன்று பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

அதாவாது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  என்டிஏ கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை  மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கலந்துகொண்டார். மேலும்,   மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக தேசிய இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், இந்திய ஜனநாயக சங்கத் தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, அகில இந்திய பாரத் பிளாக் கட்சியினுடைய தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என ஆலோசிக்கப்பட்டது. பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகபட்சமாக 24 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க வாய்ப்பிருப்பதாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருக்கிறார். இது முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால் அடுத்தடுத்த நகர்வுகளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.  இதனால்  பேச்சுவார்த்தையில் சமூக முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று (மார்ச் 2, 2026) காலை 10.45 மணிக்கு  டெல்லி புறப்பட்டு சென்றார்.   அங்கு பாஜக தலைமையிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4ல் மட்டும் வெற்றி பெற்றது. அவை கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய தொகுதிகள் ஆகும். இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்கின்றனர். ஏனெனில் தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறது.

கடந்த 2024 மக்களவை தேர்தலில் தனி அணியாக நின்று 18 சதவீதம் வரை வாக்குகளை பெற்றனர். அதில் பாஜகவிற்கு கிடைத்தது 11 சதவீதம். அதுமட்டு மின்றி 10 மக்களவை தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது. இவை அனைத்தையும் கணக்கில் வைத்து கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது.

மதுரையில் நேற்று பியூஷ் கோயலுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தினார். 2 முறை பேச்சு நடத்தியும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் அமித் ஷாவை சந்திக்க டெல்லி பயணம். சென்னையில் உள்ள பல முக்கிய தொகுதிகளையும் குறிவைத்து பேச்சு வார்த்தை நடத்துகிறது பாஜக. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். இந்த சூழலில் தான் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது/

கடந்த 2021 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்திந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக மட்டும் 179 தொகுதிகளில் போட்டியிட்டது. இரட்டை இலை சின்னத்தில் 191 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாமக 23, பாஜக 20 எனத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறை டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில் சேர்ந்திருக்கிறது. இந்த சூழலில் 170 முதல் 180 தொகுதிகளில் இம்முறை களம் காண விரும்பும் அதிமுக, எஞ்சிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டிருக்கிறது. இரண்டு இலக்க எண்ணிக்கையில் சீட் ஒதுக்க வேண்டுமெனில், பாமக, பாஜக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு வாய்ப்பிருக்கிறது.

[youtube-feed feed=1]